எந்தன் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பெருமைப் படுத்துகின்றது

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எந்தன் உள்ளம் ஆண்டவரைப்

போற்றிப் பெருமைப் படுத்துகின்றது

எந்தன் மீட்பராம் வல்ல தேவனை

நினைத்து நாளும் மகிழுகின்றது


1. ஏனெனில் அவர் தம் அடிமையின் தாழ்நிலை

கடைக்கண் நோக்கினார்

இது முதல் எல்லாத் தலைமுறையும் என்னைப்

பேறுடையாள் என்று போற்றுமே

வல்லவராம் கடவுள் எனக்கு வியத்தகு செயல் புரிந்துள்ளார்

அவர்க்கு அஞ்சி நடப்பவர்க்கு இரக்கம் காட்டி வருகிறார்

தூயவர் அவர் திருப்பெயராம்


2. ஏனெனில் அவர் தம் வலிமையைத்

தலைமுறையாய் காட்டி வருகின்றார்

மனதிலே மிகுந்த செருக்குடனே சிந்திப்போரைச் சிதறடிக்கின்றார்

வலியவரை அரியணையினின்று தூக்கி எறிந்துள்ளார்

தாழ்ந்தவரை உயர்த்தினார் பசித்தவர் நலம் பெறச் செய்தார்

செல்வரை வெறுமையாக்கினார்