விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


விடுதலை ராகங்கள் விடியலின் கீதங்கள்

முழங்கிட வாருங்களே

புது உலகமைத்திட புதுவழி படைத்திட

அன்புடன் வாருங்களே

வாருங்கள் வாருங்கள் ஆலயம் வாருங்கள்

அனைவரும் வாருங்களே - 2


1. அன்புக்காகவும் அமைதிக்காகவும் இயேசு மனுவானார்

உண்மைக்காகவும் நீதிக்காகவும் அவரே பலியானார் (2)

ஒன்று கூடுவோம் உணர்ந்து வாழுவோம் - 2

சுயநலம் நீக்கி பிறர்நலம் காத்து

அன்பினில் நாம் இணைவோம் - வாருங்கள் ...


2. ஏழை எளியவர் வாழும் இடங்களே இறைவன் வீடாகும்

வறுமைப் பிடியிலே அலறும் குடில்களே

இறைவனின் மொழியாகும் (2)

பகிர்ந்து வாழுவோம் பசியை நீக்குவோம் - 2

இறைவனின் அரசின் இனிமையைக் காண

இன்றே முயன்றிடுவோம்