♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
அரவணைக்கும் அன்பு தெய்வமே இயேசுவே
உன் அடியெடுத்து நான் செல்லும் பாதைகளெல்லாம் (2)
என்னோடு தொடர்ந்து அரவணைக்க வேண்டுமே -2
1. சோகங்கள் பலகோடி சூழ்ந்திடும் வேளையில் - உன்
சிறகினுள் எனைமூடி அடைக்கலம் தரவேண்டும் (2)
உந்தன் புது உறவிலே கவலையெல்லாம் மறந்து -2
உலகெல்லாம் நற்செய்திப் பணியினைத் தொடர்வேன்
2. வாழ்வினில் தடைகள் தொடர்ந்து வந்தாலும் - உன்
வல்லமை கரம் என்னில் இருந்திட வேண்டும் (2)
உந்தன் நல்துணையிலே பாதையினைத் தெரிந்து - 2
எந்நாளும் நிறைவாழ்வுப் பயணம் செல்வேன்