♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
எதைச் செய்யவும் எனக்கு ஆற்றல் உண்டு
என் இயேசு தருகின்ற பெலத்தினால்
எத்தனை இடர்கள் எனைச் சூழ்ந்தாலும்
என் இயேசு கொடுக்கின்ற அருள் போதுமே
1. பாவத்தை சாபத்தை வென்றார் என் இயேசு - 2
சாத்தானின் தலையை மிதித்தார் என் இயேசு
எந்நாளும் என்னோடு வாழ்கின்றார் இயேசு
ஆலேலூயா - 2 ஆலே அல்லேலூயா அல்லேலூயா
2. ஆனந்தத் தைலத்தால் அபிசேகம் செய்கிறார் - 2
அதிகாரம் எனக்களித்து என் முன்னே செல்கிறார்
பயப்படாதே நான் உன்னோடு இருக்கிறேன் என்கிறார்
ஆலேலூயா 2 ஆலே அல்லேலூயா அல்லேலூயா