பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும்
மூவொரு தேவனே வாரும் அன்பின்
மூலப்பரமே வாரும்
தேவாதி தேவனே வாரும் எங்கள்
திரித்துவ தெய்வமே வாரும்
என்றும் எந்தன் நடுவினிலே வாரும்
என்னிறை ஏந்தலே வாரும்
1. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும்
உன்னத தெய்வமே வாரும் எங்கள்
உலகத்தின் உதயமே வாரும்
நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில்
நீங்கிடா நேசனே வாரும்
ஆதிபரமே வாரும் என்றும்
ஆட்சி செலுத்திட வாரும்
2. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும்
உண்மையின் உருவே வாரும் எங்கள்
உலகத்தின் உதயமே வாரும்
சத்திய தெய்வமே வாரும் அன்பின்
சரித்திர நாயகா வாரும்
எல்லாம் வல்ல திரித்துவமே வாரும்
எங்கும் நிறைந்தவா வாரும்
3. பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும்
ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின்
ஆவலே ஏவலே வாரும்
ஈசனே நேசனே வாரும் என்றும்
ஈடில்லா இறைவனே வாரும்
எத்திசையும் வாழ் இறையருளே இன்று
எங்கள் நடுவிலே வாரும்