எழுக பாலனே இயேசு பாலனே உலகின் துயரம் தீர்த்து அருள உமது அன்பில் இதயம் நிறைய

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எழுக பாலனே இயேசு பாலனே

உலகின் துயரம் தீர்த்து அருள

உமது அன்பில் இதயம் நிறைய


1. மாட்டுக் கொட்டிலில் வசந்தம் கண்டாய்

மரியன்னை மடியில் உறக்கம் கொண்டாய்

மன்னவர் பணிய விண்ணவர் புகழ

மனிதன் உருவில் பிறந்த தெய்வமே


2. உன்னை நினைத்தால் நெஞ்சம் உருகும்

உன் பெயர் உரைத்தால் அமுதம் பெருகும்

உறவுக்குப் பொருளாய் பிறந்த நேசனே

உறைந்த மனங்கள் உறவில் கனியவே