♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதய நன்றி காணிக்கை இரக்கம் தந்த பலியிலே
இயேசுவோடு இணைந்து தருகிறேன் தந்தையே
ஏற்று உந்தன் ஆசீர் அருளுமே (2)
1. தந்தை உன்னைப் பிரிந்து தாழ்ந்து நொந்து போனேன்
கன்றைப் பிரிந்த மான்போல தவிதவித்தாயே (2) என்னைத்
தேடி வந்து சிறுமையுற்று சிறையை மீட்ட கருணையே -2
இதய நன்றி காணிக்கை இறைவா
2. என்னைக் கொள்ளை கொண்ட உந்தன் அன்பில் வாழ்வேன்
எண்ணி எண்ணி உருகி எல்லார்க்கும் சொல்வேன் (2) உந்தன்
தியாகத்தினால் நெஞ்சங்களை மீட்டுக்கொண்ட கருணையே - 2
இதய நன்றிக் காணிக்கை இறைவா