நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீ செஞ்ச நன்மையெல்லாம் உலகோர்க்குச் சொல்லிடுவேன்

நீ கண்ட கனவெல்லாம் நனவாக நானுழைப்பேன்

இயேசுவே ஒன் நெனவாக எந்நாளும் வாழுவேன் (2)


1. ஏழையின்னு வெறுக்கவில்ல பாவியின்னு ஒதுக்கவில்ல

பொண்ணுன்னு மிதிக்கவில்ல தாழ்ந்தவன்னு பழிக்கவில்ல (2)

ஒன் மனசா என் மனசு ஆகணும்

ஒன் வாழ்வா என் வாழ்வு மாறணும்

இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும்


2. துன்பங்கண்டு துடிதுடிச்ச இன்பங்கண்டு மகிழ்ந்து நின்ன

பசிகண்டு பரிதவிச்ச தாகங்கண்டு தவிச்சு நின்ன (2)

ஒன்னப் போல நானும் இங்கு ஆகணும்

அதனால் நான் பிறர் துன்பம் ஏற்கணும்

இயேசுவே இயேசுவே அதனால ஒன் கனவு பலிக்கணும்