♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
மகிழ்ச்சியை விதைத்திட வந்தவரே
மனங்களில் அமைதியை பொழிபவரே
துயரங்கள் போக்கிடும் தூயவனே
எங்கள் இதயங்கள் எழுந்தருள்வாய் (2)
பிறந்தார் இயேசு பிறந்தார்
நிறைந்தார் நெஞ்சம் நிறைந்தார் (2)
ஒன்றாக நாம் கூடி அவரன்புப் புகழ்பாடி
உறவோடு வாழ்ந்திருப்போம் (2)
1. சாதிகள் பேதங்கள் பிரிவினை மோகங்கள்
பிணக்குகள் ஒழிந்திடவே
மனிதரை மனிதராய் மதித்திடும் மாண்புகள்
மனமெங்கும் மலர்ந்திடவே (2)
எல்லோரும் சமமென்று நாம் பாடுவோம்
சமதர்ம சமுதாயம் நாம் காணுவோம்
நல்ல மனிதராய் வாழ்ந்திருப்போம்
உண்மை மனிதத்தை வளர்த்தெடுப்போம் - பிறந்தார்...
2. வாடிய முகங்களில் தளர்வுகள் தனிமையின்
கொடுமைகள் அழிந்திடவே
மகிழ்ச்சியை பொருட்களில் தொலைத்தவர்
தோழமை உறவினில் உயிர்பெறவே (2)
பாசத்தை தேசத்தின் மொழியாக்குவோம்
பகிர்கின்ற சமுதாயம் நாம் காணுவோம்
இறையாட்சியின் மனிதர்களாய்
இறையரசினை வளர்த்தெடுப்போம் - பிறந்தார்..