உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள்தாருமம்மா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

உலகாளும் தாயே அருள்தாருமம்மா - 2


1. முடமான மகனை நடமாட வைத்தாய்

கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)

பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் - 2

பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் - 2


2. கடல்நீரும் கூட உன் கோயில் காண

அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)

உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை

நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா (2) -2