♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவே உயிர் ஆற்றலே புவியை இயக்கும் புனிதன் நீ-2
நேசனே நிறை பாசமே என்னை நடத்தும் துணைவன் நீ
பெருமைவிரட்டி தொடரும்போதும் நிறைவு அமைதி அருள்பவன் நீ
1. இருளில் விழுந்து மடியும்பொழுது அறிவொளி தரும் தந்தை நீ
துயரின் பிடியில் துவளும் நொடியில் ஆறுதல் தரும் தாயும் நீ (2)
தனிமை போக்கும் உறவும் நீ இனிமையாக்கும் இறையும் நீ
மனதில் ஒலிக்கும் கவலைக்கடலை அகற்றும் அருளும் நீ
2. வாழ்வை மறுக்கும் தீமையை விரைந்து ஒழிக்கும் வீரம் நீ
எளியோர் வாழ்வு புவியில் புலர உழைத்து மகிழும் தியாகம் நீ
நீதி கேட்கும் வன்மை நீ நன்மை நாடும் தூய்மை நீ
உண்மை எங்கும் மலர உதவும் மக்கள் சக்தியும் நீ