♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவின் சந்நிதியில் மகிழ்வோம் வாருங்கள்
என் தேவனில் நம் இயேசுவில் இணைந்து மகிழுங்கள் - 2
1. சந்தங்கள் பல வண்ணங்கள் உந்தன் பந்தங்கள் தினம் பாடுவேன்
எண்ணங்கள் சங்கீதங்கள் என்றும் என் இன்ப சுகராகங்கள்
நீ செய்த நன்மைகள் என் வாழ்வின் விடியல்கள்
என்றென்றும் நான் பாடுவேன் (2)
2. காலங்கள் பல நாளுமே உந்தன் கனிவான அருள் தாருமே
தாகங்கள் இனி மாறுமே என்றும் என் ஆன்ம குறை தீருமே
என் ஆயுட் காலங்கள் உன் அன்பில் நான் வாழ
என் இல்லம் தங்கிடுவாய் (2)