♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசு எனது இறைவன் என்று எடுத்துச் சொல்லுவேன்
ஆசை தீர இயேசு நாமம் பாடிப் புகழுவேன் (2)
பண்பாடுவேன் இந்நாளிலே பாடாத ராகங்கள் நான் பாடுவேன் -2
1. மாந்தர்களே மகிழுங்களே ஆ... 2
மன்னன் இயேசு நம்மை என்றும்
கண்ணின் மணிபோல் காக்கும்போது
என்ன வேண்டும் இன்னும் வேண்டிட
2. வானோர்களே வாழ்த்துங்களே ஆ...2
வாக்கினாலே யாவும் ஆக்கும் வல்ல தேவன் இயேசு என்று
சொல்ல வேண்டும் தொல்லை தீர்ந்திட