உலர் திருப்பலி என்பது புதிய வார்த்தை அல்ல. ஆதித்திருச்சபையில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைதான். இன்றும் கூட வழக்கத்தில் உள்ள வார்த்தைதான்..
திருப்பலிக்கு அடுத்தபடியாக மிகுதியான பலன்களைத் தருவது திருச்செபமாலையே.. ஆதித் திருச்சபையில்… ஆதிக்கிறிஸ்தவர்கள் முதல் முன்னூறு ஆண்டுகள் ஓடிக்கொண்டே இருந்தபோது ( வீடுகளில் மறைந்தும், காடுகளில் ஒளிந்தும் வாழ்ந்த போது) பயன்படுத்தப்பட்ட மந்திரங்கள்தான் பரலோக மந்திரங்களும், அருள் நிறை மந்திரங்களும், மற்றும் விசுவாசப்பிரமாணமும். விசுவாசப் பிரமாணம் நம்முடைய முதல் போப் ஆண்டவர் புனித ராயப்பர் இருக்கும்போதே ஏற்படுத்தப்பட்டுவிட்டது..
ஏற்கனவே கூறியிருந்ததை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறோம்..
அருள் நிறை மந்திரம் வார்த்தையாய் இருந்த சர்வேசுவரனை மனுவுருவாக்க எப்போது கபரியேல் சம்மனசானவர் தேவ மாதாவுக்கு மங்கள வார்த்தை சொல்லினாரோ…
நம் தெய்வ திருத்தாய்
“ இதோ ! ஆண்டவருடைய அடிமை. உம்முடைய வார்த்தையின்படியே எனக்கு ஆகட்டும்.. என்று இறைத்திட்டத்திற்கு சம்மதத்தை தெறிவித்தாரோ..
அதாவது வார்த்தையாய் இருந்த சர்வேசுவரன் இந்த பூமிக்கு எப்போது மனித அவதாரம் எடுத்தாரோ..
அப்போதே அருள் நிறை மந்திரம் உதயமாகிவிட்டது..
அருள் நிறை மந்திரத்தின் ஆசிரியர்கள் முன்பே குறிப்பிட்டது போல் பிதாவாகிய சர்வேசுவரனும், பரிசுத்த ஆவியான சர்வேசுவரனும்..
பரலோக மந்திரத்தை நேரடியாக இயற்றியது நம் சுதனாகிய சர்வேசுவரன்..
ஆக அருள் நிறை மந்திரமும், பரலோக மந்திரம், விசுவாசப்பிரமாணம் ஆதிமுதல் இருக்கிறது.. நாம் இப்போது கரங்களில் வைத்திருக்கும் 53 மணிகள் அடங்கிய ஜெபமாலையாக உருவாகியதுதான் கி.பி.1214. அதுவும் தேவ மாதாவே ஒரு பதித்தத்தை ஒழிக்க கடுமையாக தவம் செய்த சுவாமி நாதருக்கு (St.Dominic). அந்த தப்பரையை ஒழிக்கவும், ஜெபமாலை பக்தியை ஏற்படுத்தவும் நேரடியாக கொடுத்தார்கள்.
“ ஒ என் இயேசுவே ! ஜெபம் புனித பாத்திமா சிறுமிகளுக்கு தேவ மாதா நேரடியாக காட்சி கொடுத்து அப்பிள்ளைகளுக்கு நரகத்தை திறந்து காட்டி பாவிகள் நரகத்தில் விழாதிருக்க இந்த ஓ என் இயேசுவே ஜெபத்தை சொல்லிக்கொடுத்துள்ளார்கள்..
மேலும் நாம் ஜெபிக்கும் ஜெபமாலையில் வரும் அநேக ஜெபங்கள் வேதகாமத்தின் திருவசனங்களே.. அதுவும் இரு புறம் கருக்கு வாய்ந்த ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே…
ஏன் இந்த முன்னோட்டம் என்றால் கத்தோலிக்கர்களாகிய நம் கரங்களில் இருப்பது தேவ வார்த்தையும், தேவ இரகசியமும் அடங்கிய ஒரு வலிமையான ஆயுதம் ( இந்த ஜெபமாலையை சில பிரிவினை சபையினரும், சில பிற மத சகோதரக்களும் ஜெபிக்கிறார்கள் என்பது குறிப்பிடப்பட்டது).
ஜெபமாலையின் பலன்கள் நிறைய உள்ளது… ஆனால் இப்போதைய தேவையான பலன்களை மட்டும் பார்ப்போம்…
1. நம் பாவங்களில் இருந்து மன்னிப்படைய இச்செபமாலை உதவுகிறது. இதுபோன்ற பாவசங்கீர்த்தனம் செய்ய முடியாத சமையங்கள், சூழ் நிலைகளில் நம் பாவங்களை கழுவுவது ஜெபமாலையே.. பின்பு வாய்ப்பு வரும்போது பாவசங்கீர்த்தணம் செய்ய வேண்டும். ஆகையினால் முதலில் நம் ஆன்மாவை பரிசுத்தப்படுத்த ஜெபமாலை உதவுகிறது..
2. நம் ஆன்மாவையும், பிறர் ஆன்மாவையும் மற்றும் கடினப்பட்ட ஆன்மாக்களையும் மீட்க உதவுகிறது.
3. நம்மை தீமைகளிலிருந்து பாதுகாக்கிறது. குறிப்பாக இதுமாதிரியான வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தையும் பாதுகாக்கிறது.
4. இப்போது தேவ பாதுகாப்பு மிக மிக முக்கியமாக இருப்பதால் ஜெபமாலை அத்தியாவசியமாகிறது.
5. இப்போது நிறைய மக்கள் குடும்பத்தோடு வீட்டில் இருப்பதாலும் ( அல்லது வீட்டில் இருக்கும் மக்கள் மட்டும்) குடும்ப ஜெபமாலை செய்வதால் அவர்கள் குடும்பம் மட்டுமன்று பக்கத்து வீட்டு குடும்பங்கள்...நம் தேசம், ஏன் உலகமே பாதுகாப்படுகிறது.. நம் ஒரு குடும்பம் ஜெபித்தாலும் இப்போதைய உலக மக்கள் தொகையான 970 கோடி மக்களுக்கும் அதன் பலன் போய் சேருகிறது ( ஜெபமாலை பன்மையாக ஜெபிக்கப்படுவதால் உதாரணமாக பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே ! பாவிகளாயிருக்கிற எங்களுக்காக..)
6. ஜெபமாலை எண்ணற்ற அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்திருக்கிறது . முன்பு குறிப்பிட்டது போல் அனுகுண்டின் பாதிப்பிலிருந்து கூட காப்பாற்றியிருக்கிறது. இந்த கொரோனோ வைரஸ் எம்மாத்திரம்.
7. ஆகையினால் இந்த வைரஸை விரட்ட ஒரே வழி இப்போதைக்கு ஜெபமாலை மட்டும்தான்..
8. ஜெபமாலையை சிலர் இப்போது கையில் எடுத்தாலும் அதை எப்போதும் விட்டுவிடாதீர்கள் அதுதான் நமக்கு நல்லது ; பாதுகாப்பு..
ஆகையினால் நாம் இப்போது செய்யவேண்டியது… ஆசை நன்மை வாங்கி ஜெபமாலையை குடும்பமாக கூடி ஜெபிப்பது மட்டும்தான்.. வேறு வழி இல்லை.. சரியான வழியும் இது மட்டுமே.. மேலும் நாம்
தவக்காலத்தில் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே நிறைய ஒறுத்தல் முயற்சிகளை செய்து தேவ பிதாவை சாந்தப்படுத்துவோம். ஒறுத்தல் முயற்சிகளை பிதாவுக்கு மாதாவின் மூலமாக ஒப்புக்கொடுக்கலாம்…மேலும் ஒரு சந்தி, சுத்தபோசனம் நாம் ஏற்கனவே கடைபிடித்துக்கொண்டு இருக்கிறோம்.. நாம் இப்போது இருக்கும் சூழ்நிலையையும் ஒப்புக்கொடுப்போம்..
ஆகையால் உலர் திருப்பலியாம் ஜெபமாலையை கையில் எடுத்து நம்மையும், நம் குடும்பங்களையும் மாதாவின் மாசற்ற இருதயத்திற்கும், மாதாவின் அடைக்கலத்திலும், பாதுகாப்பிலும் ஒப்படைத்து மூவொரு கடவுளுக்கு மகிமை சேர்க்கும், மாதாவுக்கு மிகுந்த வல்லமையை கொடுக்கும் திருச்செபமாலை என்ற வலிமையான ஆயுதத்தை கையில் எடுத்து, நம்மையும், பிறரையும் மீட்டு இந்த கொடிய வைரஸை நம் நாட்டைவிட்டும், இந்த உலகை விட்டும் விரட்டுவோம்..
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !