தூய லூர்து அன்னை ஆலயம்
இடம்: விசுவாசப்பட்டி, மகனூற்பட்டி கிராமம், அண்டியூர் அஞ்சல், 635307
மாவட்டம் : கிருஷ்ணகிரி
மறைமாவட்டம் : தருமபுரி
மறைவட்டம் : அரூர்
நிலை : பங்குதளம்
பங்குதந்தை: அருள்பணி. I. ராபர்ட்
குடும்பங்கள்: 200
அன்பியங்கள்: 8
திருப்பலி நேரங்கள்:
ஞாயிறு காலை 08:00 மணி
திங்கள், புதன் காலை 06:30 மணி
செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி மாலை 06:30 மணி
திருவிழா: பிப்ரவரி மாதம் 11-ம் தேதி
மண்ணின் இறையழைத்தல்கள்:
Fathers
1. Fr. R. ஜேசுதாஸ், தருமபுரி மறைமாவட்டம்
2. Fr. அந்தோணி ராஜ், SSS
Seminarian
1. Decon. வின்சென்ட் பிரபாகர், தருமபுரி மறைமாவட்டம்
2. Bro. கிறிஸ்டி, தருமபுரி மறைமாவட்டம்
Sisters
1. Sr. ஜோஸ்பின் ராணி (Cloistered nuns, Trichy)
2. Sr. அருள் மேரி பிரசில்லா (Cloistered nuns, Vellore)
3. Sr. மோக்ஷராக்கினி (Gonzaga)
4. Sr. நளினி ஜோசப் (Augustine)
5. Sr. ஷாலினி அண்ணாமலை (Augustine)
6. Sr. விண்ணரசி தாஸ் (SCB)
7. Sr. செல்வி அந்தோணி குரூஸ் (SRA)
வழித்தடம்: திருப்பத்தூரிலிருந்து (NA) தெற்கே செல்லும் சிங்காரப்பேட்டை சாலையில், திருப்பத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது.
Map location: https://maps.google.com/?cid=82077380886931089
வரலாறு :
விசுவாசப்பட்டியில் 1935 ஆம் ஆண்டளவில் கிறிஸ்தவர்களின் குடியேற்றம் நிகழ்ந்திருந்தாலும், இப்பகுதியில் கிறிஸ்துவ பிரசன்னம் 1800 ஆண்டளவில் இருந்தது. ஊத்தங்கரைக்கு வடக்கே கானாம்பட்டி, மல்லியம்பட்டி என்ற இரு ஊர்களில் கிறிஸ்தவர்கள் இருந்தனர். இந்த கிறிஸ்தவர்கள் 1820 ஆம் ஆண்டளவில் எலத்தகிரிக்கு குடி பெயர்ந்தார்கள் என்று சேலம் மறைமாவட்ட வரலாற்று நூலான சரித்திர சுருக்கம் கூறுகிறது (பக்கம் 87). இவர்கள்தான் இன்றைக்கு எலத்தகிரியில் இருக்கும் பாப்பு குடும்பத்தின் முன்னோர்கள் என்று தந்தை டெபியின் குறிப்பு கூறுகிறது.
கோவிலூர் பங்கில் பணியாற்றிய அருள்தந்தை தர்மநாதர் (Moury Amedee MEP) 1853 இல் இப்பொழுதுள்ள விசுவாசபட்டிக்கு அருகில் உள்ள ரெட்டிவாசலிலும், கிருஷ்ணாபட்டியிலும் சில கிறிஸ்தவர்கள் இருந்தார்கள் என்று குறிப்பிடுகிறார் என்பதை சேலம் சரித்திர சுருக்கம் கூறுகிறது (பக்கம் 111). பின்பு இவர்களைப் பற்றிய கூடுதல் விவரங்கள் இல்லை.
1930 ஆம் ஆண்டிற்கு பிறகு மகனூற்பட்டி பகுதியில் இருந்த நிலங்களை, ஏழை விவசாயிகளுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. சென்னையில் பதிவாளராக பணியாற்றிய திரு. ஜெ.சி. ராயன் இதைப்பற்றி குருக்களிடம் பேசி, ஏழை கிறிஸ்தவ குடும்பங்கள் நிலம் பெற மகனூர்பட்டிக்கு வந்தார், என்ற செய்தி மக்கள் இடையே நிலவி வருகிறது. சேலம் மறைமாவட்ட பொன்விழா மலரில் 1938 இல் இக்குடியேற்றம் நடந்ததாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் 1936 இல் ஒரு திருமுழுக்கு நடந்ததாக பதிவேட்டில் காண்கின்றோம். இதிலிருந்து கிறிஸ்தவர்கள் குடியேற்றம் 1936 ஆம் ஆண்டில் நடைபெற்று இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
முதல் முதலாக நீப்பத்துறை அருகில் இருக்கும் கட்டமாவு பகுதியில் இருந்து விசுவாசபட்டிக்கு வந்தனர். பின்பு மல்லப்பட்டி (பர்கூர் அருகில்), உரிகம் (கோலார் அருகில்), புதுப்பட்டு, ஓமலூர், செட்டிப்பட்டி, நொச்சிப்பட்டி, குரும்பேரி கொண்டம்பட்டி, மூலக்காடு, கெரட்டாம்பட்டி மூகையூர், ஜோலார்பேட்டை, அத்திப்பட்டி ஆகிய ஊர்களில் இருந்து இக்காலகட்டத்தில் இங்கு குடியேறினர்.
நிலம் குடியிருப்போர் சங்கம் வழியாக மக்களுக்கு நிலம் கொடுக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் தருமபுரி திரு. ராயப்பன், அன்றைய துணை பதிவாளர் இம்மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தார் என்று, இன்றும் இப்பகுதி மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.
இப்பகுதியில் வந்த முதல் மறைப்பணியாளர் அருட்பணி. பிதலிஸ் (Fr. Fidalis, SDB) என்கின்றார்கள். கொள்ளை வந்தபோது விசுவாசத்தோடு ஜெபிக்கும்படி மக்களை அறிவுறுத்தி, சிலுவை ஒன்றை மக்கள் குடியிருப்பில் அருள்திரு பிதலிஸ் நிறுவினார். சிலுவை நிறுவிய இடத்தில் தற்போது புனித செபஸ்தியார் குருசடி உள்ளது. அவருடைய பெயராலேயே இக்குடியிருப்பு விசுவாசப்பட்டி என்று அழைக்கப்படுகிறது என்பது மக்களிடையே வழக்கத்தில் உள்ள செய்தியாகும். விசுவாசபட்டி என்ற பெயர் அரசின் எந்த பதிவிகளிலும் இன்னும் இடம்பெறவில்லை.
முதலில் திருப்பத்தூர் சலேசிய குருக்களின் கண்காணிப்பில் இருந்த விசுவாசப்பட்டி, பின்னர் எலத்தகிரி, தென்கரைக்கோட்டை போன்ற பங்குகளின் கிளை பங்கானது.
1942 முதல் 1960 வரை எலத்தகிரி, பி.பள்ளிப்பட்டி, தென்கரைக்கோட்டை பங்கு தந்தையர்கள் கண்காணிப்பிலும் மற்றும் ஒரு MEP தந்தையர் பொறுப்பிலும் விசுவாசப்பட்டி இருந்துவந்தது.
1914-1945 - அருள்பணி. PA. சர்க்கரையா (எலத்தகிரி)
1945-1947 - அருள்பணி. பழபரம்பில் (பி. பள்ளிப்பட்டி)
1947-1948 - அருள்பணி. ஜார்ஜ் (பி. பள்ளிப்பட்டி)
1948-1952 - அருள்பணி. ஜெ. மார்ட்டின், MEP
1952-1953 - அருள்பணி. T.C. ஜோசப் (பி. பள்ளிப்பட்டி)
1953-1955 - அருள்பணி. ஜெ. மார்ட்டின், MEP
1955-1960 - அருள்பணி. ரவேல், MEP (தென்கரைக்கோட்டை)
இதில் ஜே. மார்ட்டின் MEP விசுவாசப்பட்டியிலேயே தங்கி பணியாற்றினார்.
1960 முதல் 1968 வரை திருப்பத்தூர் சலேசிய குருக்கள் விசுவாசப்பட்டி மறைப்பணித்தள பொறுப்பை ஏற்றனர். இக்காலத்தில் தான் 1968 ல் ஊத்தங்கரைக்கு அருகில் உள்ள மிட்டாபள்ளியில் மனமாற்றங்கள் நிகழ்ந்தன. 22.4.1968 அன்று அருள்தந்தை. ஆபிரகாம், SDB அவர்களால் 24 பேருக்கு திருமுழுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பு உள்ளது.
1969 ஆம் ஆண்டு விசுவாசப்பட்டி பங்குத்தளமாக உயர்த்தப்பட்டு, மீண்டும் சேலம் மறைமாவட்ட குருக்கள் பங்கு தந்தையராக பொறுப்பேற்று, விசுவாசப்பட்டியில் தங்க ஆரம்பித்தனர். மிட்டாப்பள்ளி, ஊத்தங்கரை ஆகியவை இதன் கிளைபங்காயின.
1982 ஆம் ஆண்டு விசுவாசப்பட்டியிலிருந்து பிரிந்து, ஊத்தங்கரை தனிப்பங்கானது.
03.03.1986இல் விசுவாசப்பட்டியில் பாதம் பதித்த அப்போஸ்தலர்கள் ராக்கினி சபை (SRA) சகோதரிகள் மருத்துவமனை ஒன்றைத் துவங்கினர். பின்னர் மழலையர் பள்ளி ஒன்றை துவங்கி, 2009 ஆம் ஆண்டு மெட்ரிக் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. லூர்து மாதா ஆங்கிலப் பள்ளி வழியாகவும் சிறந்த கல்வி வழங்கி வருகின்றனர்.
பழைமையான பங்கு ஆலயத்திற்கு பதிலாக அருள்திரு. துரைராஜ் அவர்கள் முயற்சியில் புதிய ஆலயம் கட்டப்பட்டு 19.02.1993 இல் புனிதப்படுத்தப்பட்டது.
பங்குத்தந்தையர் புதிய இல்லம் கட்டப்பட்டு 29.05.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது. விசுவாசப்பட்டியில் முதல் முதலாக தங்கி பணியாற்றியவர் பாரிஸ் மறைப்பரப்புபணி சபையை சேர்ந்த அருள்திரு. ஜெ. மார்ட்டின் ஆவார். அவருடைய நினைவு போற்றும் வகையில் சமுதாயக்கூடம் ஒன்று 18.2.2009 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, கட்டிடம் கட்டும்பணி பங்குத்தந்தை அருள்திரு. P. மார்ட்டின் கிறிஸ்துதாஸ் காலத்தில் தொடங்கப்பட்டு கட்டிட வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.
பங்கின் பங்கேற்பு அமைப்புகள்:
1. மரியாயின் சேனை
2. வின்சென்ட் தே பால் சபை
3. பாடகர் குழு
4. பீடச்சிறுவர்கள்
5. இளையோர் இயக்கம்
கன்னியர்கள் சபை:
அப்போஸ்தலர்களின் ராக்கினி கன்னியர்கள் (SRA)
பங்கில் உள்ள பள்ளி:
லூர்து மாதா மெட்ரிக் பள்ளி.
பங்கில் பணியாற்றிய பங்குத்தந்தையர்கள் பட்டியல்:
1) 1969-1975 - அருட்பணி. P.A. குரியாக்கோஸ் குருசுங்கல்
2) 1975-1976 - அருட்பணி. தாமஸ் கீராஞ்சிரா
3) 1976-1978 - அருட்பணி. பால் தாழதட்
4) 1978-1983 - அருட்பணி. C. மைக்கேல்
5) 1983-1988 - அருட்பணி. M. ஆரோக்கியம்
6) 1988-1989 - அருட்பணி. C.S. அந்தோணிசாமி
7) 1989-1994 - அருட்பணி. A. துரைராஜ்
8) 1994-2001 - அருட்பணி. A. மத்தியாஸ்
9) 2001-2005 - அருட்பணி. M. இருதயராஜ்
10) 2005-2008 - அருட்பணி. M. மாசில்லாமணி
11) 2008-2010 - அருட்பணி. P. மார்ட்டின் கிறிஸ்துதாஸ்
12) 2010-2014 - அருட்பணி. A. போஸ்கோ மதலைமுத்து
13) 2014-2018 - அருட்பணி. S. ஜேசுதாஸ்
14) 2018-2020 - அருட்பணி. R. டோமினிக் ராஜ்
15) 2020-2023 - அருட்பணி. J. ஆரோக்கியசாமி
16) 2023 முதல் - அருட்பணி. I. ராபர்ட்
தூய லூர்து அன்னையிடம் வேண்டிய வரங்களைப் பெற்று, நிறைவான விசுவாச வாழ்வை வாழ விசுவாசப்பட்டி வாருங்கள்..
தகவல்கள்: பங்குத்தந்தை அருட்பணி. ராபர்ட் அவர்கள்
தகவல்கள் சேகரிப்பில் உதவி மற்றும் புகைப்படங்கள்: Mr. Yesudass Joseph Krishnagiri