♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
கண்ணான கண்ணின் மணி
கண்ணுறங்கு செல்ல மணி
ஆரிரோ நான் பாடுவேன்
பொன்னான பொன்னின் மணி பொங்கி வரும் வெள்ளிமணி
தாலேலோ நான் பாடுவேன்
ஆராரோ பாட இங்கு யாருமில்லேன்னு
நீ வாடத் தேவையில்லை நானும் உன்னோடு
தாயாக நான் இருப்பேன் கண்ணா கண்ணா
உன்னோடு தான் இருப்பேன் ஒண்ணா
1. உலகத்தில் எல்லாரும் வேகமாக போகுறாங்க
உனை வந்து பாக்குறது வீண் என்று எண்ணுறாங்க
வாடாதே வாடாதே எந்தன் கண்ணே
யார் எங்கே போனாலும் நான் உன் முன்னே
காலம் ஒருநாள் மாறும் - நம் கவலை யாவும் தீரும்
நாளும் ஒருநாள் விடியும் - நல்ல உறவும் மண்ணில் மலரும்
கண்ணே நீ இப்போது கண்மூடித் தூங்கு
2. ஈராயிரம் காலமாக ஆண்டு தோறும் மறக்காம
இயேசு பிறப்பு நாளில் எல்லோரும் மகிழ்வாங்க (2)
மெய்யாக மெய்யாக நீதான் கண்ணே
இயேசென்னும் பிஞ்சுப் பூ மண்ணில் கண்ணே
உன்னை அறிந்தவர்கள் வருவார்கள்
உள்ளதை உன்னிடம் தருவார்கள்
உறவின் வாழ்த்துகள் உரைப்பார்கள்
உளமதில் அமைதி பெறுவார்கள்
கண்ணே நீ இப்போது கண்மூடித் தூங்கு