♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆண்டவரே தாவீதின் திருமகனே
கேட்பதைத் தாரும் இயேசையா
நாங்கள் கேட்பதைத் தாரும் இயேசையா
1. வயல்வெளியில் வியர்வை சிந்தும் உழைக்கும் மக்களின்
வறுமை நீங்கிட வழியைச் சொல்ல வா
சமநீதி இல்லாமல் தவிக்கும் உலகிலே
உரிமைக்காக உயிர்கொடுக்கும் சக்தியாக வா
பொய்மை அழிந்து உண்மை மலர
பாசம் வளர்ந்து உறவு பிறக்க (2)
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே
2. கடலலையில் போராடும் மனிதருக்கெல்லாம்
கலங்கரை தீபம் நீயாக வா
ஏழ்மையெனும் பிணியில் வாழும் மாந்தருக்கெல்லாம்
ஏற்றம் காணும் வழியைச் சொல்லும் இயேசு ராஜனே
நன்மை நிறைந்து நீதி நிலைக்க
வானம் பொழிந்து வறுமை ஒழிய (2)
உழைக்கும் உறுதி வேண்டுமே இறைவன் அரசும் மலருமே