♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நீ எந்தன் நண்பன் இனிய அன்பு இயேசுவே
நீ எந்தன் வாழ்வினில் என்னோடு நடக்கவே வா தெய்வமே (2)
1. உனைத் தாங்கி என்னுள்ளம் நடைபோடும் போதினில்
உலகெல்லாம் உந்தன் மயம் (2)
சுனையாகி என் வாழ்வில் உன் ஆசி வழிந்தோட
நலமெல்லாம் காணும் மனம்
தேவா உன்னோடு நான் காணும் உறவென்றுமே
பூப்போல் மலரட்டும் தேன் போல் சுவைக்கட்டும்
அதுவே எந்தன் பேரின்பமே
2. இருள் தாக்கும் வேளையில் துயர் நெஞ்சில் சூழ்கையில்
எனக்கென்று நீதான் துணை (2)
பொருள் வந்து சேர்ந்தாலும் பலர் என்னைச் சூழ்ந்தாலும்
உனக்கிங்கு யார்தான் இணை
தேவா உன் ஆட்சி என் நெஞ்சில் தழைக்கட்டுமே
நீதான் என் தெய்வம் என்னோடு வரும் சொந்தம்
வா வா இன்று இதயத்தில்