♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவின் தலைமையில் புதியதோர் உலகம்
அமைத்திட எழுந்திடுவோம் - நம்
இதயத்தில் எழுந்திடும் எண்ணங்கள் யாவையும்
இசையுடன் முழங்கிடுவோம் - 2
இறைகுலமே எழுக ஆ இறையரசே வருக - 2
1. ஏழைகள் வாழும் தெருக்களில் இறங்கி
இயேசுவே நடந்து சென்றார் - நம்
இறைவனின் அரசு அவர்களுக்குரியது
என்பதை எடுத்துச் சொன்னார் (2) அந்த
இறைமகன் இயேசுவின் பாதங்கள் வழியில்
பயணத்தைத் தொடந்திடுவோம் (வாழ்க்கை) - 2
2. சிறைகளில் வாழ்வோர் விடுதலை அடைவர்
என்று இயேசு சொன்னார் - அவர்
ஒடுக்கப்பட்டோருக்கும் உரிமையற்றோருக்கும்
வழங்குவேன் வாழ்வு என்றார் (2)
நம் விழிகளைத் திறந்து உலகினைப் பார்ப்போம்
ஆவியின் வழிநடப்போம் தூய ஆவியின் வழிநடப்போம்