எடுத்து வந்தோம் காணிக்கையை இறையமுதே உம்மைச் சூழ வந்தோம் இனிதாகவே எமை ஆளவே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


எடுத்து வந்தோம் காணிக்கையை

இறையமுதே உம்மைச் சூழ வந்தோம்

இனிதாகவே எமை ஆளவே - இதை

ஏற்பாய் என்று வேண்டுகிறோம்

எடுத்து வந்தோம் காணிக்கையை


1. வாழ்வும் உமதே தாழ்வும் உமதே

வையத்தில் படைத்ததெல்லாம் உமதே (2)

எம் சிறு வாழ்வில் நிகழ்வதெல்லாம்

உம் திருப்பலியாய் மாற்றிடுமே


2. கடைநிலை வாழ்ந்தோம் கடமையை மறந்தோம்

கடவுளே உம்மிடம் வந்துள்ளோம் (2)

கருணையின் சுனையே இறையவனே

கடமையின் நிறைவை எமக்கருளே