நான் உன்னைப் பாடவந்தேன் அன்பனே நல் அன்பனே என் இனிய இயேசுவே எந்நாளுமே உன் இதயமே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நான் உன்னைப் பாடவந்தேன் அன்பனே நல் அன்பனே

என் இனிய இயேசுவே எந்நாளுமே உன் இதயமே

எந்தன் இல்லமே எந்தன் இல்லமே (2)


1. அமுதமொழிகள் பேசும் உந்தன் வார்த்தை ஒன்று போதுமே (2)

அலையும் புயலும் தாக்கும் எனது மனதில் அமைதி தோணுமே

ஒரு வார்த்தை பேசுமே என் வாழ்வு மாறுமே -2


2. சேயை அணைக்கும் தாயைப்போல

என்னை அணைக்க வேணுமே (2)

நோயும் பேயும் நீங்கினாலும் நலமாய் வாழவேணுமே

உன் கரங்கள் போதுமே நான் சுகமாய் வாழுவேன் - 2