ஆண்டவரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
1. அற்புதங்கள் நிகழ்ந்திடும் அருள்நிறை
வழங்கிடும் ஆலயம் நுழைகையிலே
வரும் துயரத்தின் சுவடுகள் தூரத்தில்
போய்விழும் தூயவர் துணையினிலே
திருவருள் புரிந்தெங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
2. திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் துறவியர்
இறைமக்கள் அனைவருமே உம்
மகிழ்வில் நீதியில் உண்மையில்
என்றும் உறவுடன் வாழ்ந்திடவே
அருள்வரம் புரிந்தெங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
3. தென்னக கடலலை தெம்மாங்கு
பாடிடும் எம்மவர் இதயமதில்
விண்ணகம் இசைத்திடும் இனிய
நல்ராகங்கள் மீட்டிடும் தருணமிதே எம்
நன்றியின் மன்றாட்டை மலர்களாய்த் தூவுகிறோம்
4. திருப்பலி விருந்தினில் திளைத்திட
மகிழ்ந்திட திருவருள் பெற்றிடவே
நற்செயல் புரிவதில் நாளெல்லாம்
சிறந்திட நானிலம் நலம் பெறவே
உமதாசீர் பொழிந்தெங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
5. மீட்பரின் புகழ்தனை பெருமையுடன்
முழங்கும் நற்கருணை விருந்தில்
உடல் உள்ளம் நலமாய் வளமிகு
எதிர்காலம் சமைத்திடும் வரங்களையே
பொழிந்திட வேண்டுமாய் மன்றாட்டைத் தூவுகிறோம்