கலங்காதே மகனே கலங்காதே மகளே விசுவாசத்தினால் நீ பிழைத்துக் கொள்வாய்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


கலங்காதே மகனே கலங்காதே மகளே - 2

விசுவாசத்தினால் நீ பிழைத்துக் கொள்வாய்

மகனே மகளே நீ கலங்காதே

வரும் விடுதலையால் உன் சுமைகள் எல்லாம்

சுகமாகும் சுகமாகும்

நம்பிடுவாய் நடத்திடுவேன் நம்பிடுவாய் நடத்துகிறேன் - 2

விசுவாசத்தினால்


1. உன் உறவுகள் உடைமைகள் உண்மைகள் நிதம் அழிந்தாலும்

உன் உள்ளமதை நான் கண்டேன் - 2

கலங்காதே மகனே கலங்காதே மகளே (உன் உறவுகள்...)

அனுப்புகிறேன் என் ஆவியை - 2 அழிந்தொழியட்டும் அநீதிகள்

நம்பிடுவாய் நடத்திடுவேன்


2. உன் தேசத்தில் உரிமைகள் மறுத்தாலும் உனை வதைத்காலும்

என் அன்பினிலே காத்துக் கொள்வேன் (உனை) - 2

கலங்காதே மகனே கலங்காதே மகளே (உன் உறவுகள்...)

அனுப்புகிறேன் என் ஆவியை - 2 அழிந்தொழியட்டும் அநீதிகள்

நம்பிடுவாய் நடத்திடுவேன்