♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தேவா உன் திருவடியை என்றென்றும் நான் தேடுவேன்
நாதா உன் சந்நிதியை தினந்தோறும் நான் நாடுவேன் (2)
சுகமான நினைவாலே சுரமான சொல்லாலே - 2
நிதம் உந்தன் பதம் தேடுவேன் - உன்
அருளாலே உயிர் வாழுவேன்
1. இருளான உலகத்திலே நீ ஒளியாக வரவேண்டுமே - 2
தடுமாறி தவறாக நான் வாழும்போது
வழிகாட்டி எனைக் காக்க வா எனக்காக உயிர் வாழ்பவா
ஒளியாக வழியாக உயிராக வந்து
எனக்காக உயிர் நீத்தவா - கல்வாரி பலியானவா
2. நிலையில்லா உலகத்திலே நீ நிலை வாழ்வு தரவேண்டுமே -2
பொய்யான சுகம் தேடி நான் வாழும்போது
மெய்ஞானம் சுடர் ஆனவா இருள்நீக்கி அருள் ஆனவா
உயிராக உறவாக நிறைவாழ்வு தந்து
இறையாக எனை ஆள்பவா - என் இயேசு மனுவானவா