அழகோவியமே எங்கள் அன்னை மரியே உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


அழகோவியமே எங்கள் அன்னை மரியே

உயிரோவியமே எங்கள் உள்ளங் கவர்ந்தவளே

உன் பார்வை சொல்லும் கருணையும் பாத மலரின் அருமையும்

அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே


1. கோடான கோடி மக்கள் குறைகளைத் தீர்ப்பவளே

கொள்ளை அழகோடு எங்கள் ஆலயம் அமர்ந்தவளே

அம்மா நீ தேரினிலே பவனி வரும் போதினிலே

ஒய்யாரமாக மனம் ஊர்வலமும் போகிறதே

யாரும் இல்லா ஏழை எங்கள் தஞ்சம் நீயே தாயே

உம்மை நம்பி வந்தோம் இங்கு உள்ளதெல்லாம் தந்தோம்

உந்தன் முகத்தைப் பார்க்கும்போது உள்ளம் மகிழுதே

உந்தன் நாமத்தைச் சொல்லும் போது நெஞ்சம் இனிக்குதே


2. ஆதாரம் நீயே என்று அண்டி வருவோர்க்கு

எல்லாம் ஆதரவு தருபவளே அன்னை தாய்மரியே

அம்மா உன் காட்சிகளெல்லாம் ஏழைகளின் பாக்கியமே

எந்நாளும் இவர்களுக்கு உதவிடும் திருக்கரமே

கண்ணின் மணியைப் போல

என்னைக் காத்திடும் தெய்வத் தாயே

மண்ணின் மைந்தர்கள் நாங்கள்

உந்தன் பாதம் பற்றியே வாழ்வோம்

இன்னும் ஒருமுறை என் தாயே

இனி இந்த உலகினில் பிறந்தால்

ஏழை எளியவர் முன்னாடி இங்கு புது உலகம் படைப்பாய்