♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
தினம் தினம் தன்னையே தந்திடும்
என் உயிரான இயேசுவே
நிதம் நிதம் நினைத்துன்னை வாழும்
நல்ல இதயம் நாங்கள் தருகின்றோம்
ஏற்றருளும் ஆண்டவரே மாற்றிவிடும்
உன் பலிப்பொருளாய் - 2
1. படைத்தாய் அழகு உலகம் புதுப் படைப்பாய் மாறச் செய்தாய்
கொடுத்தாய் உன்னை முழுவதும் உலகம் மீட்பு அடைய
அழைத்தாய் எம்மை தினமும்
உன் கரத்திலே இணைந்து எம்மையே இழந்து
உவப்புடன் தருகின்றோம் கனிவுடன் ஏற்றிடுவாய்
2. மழையாய் நீயும் வந்து இந்த உலகை மலரச் செய்தாய்
உடைத்தாய் உந்தன் உடலை மனிதம் முழுமை அடைய
பணித்தாய் எம்மை தினமும்
எம் சுயநலம் கடந்து எம்மையே மறந்து
உமக்கெனத் தருகின்றோம் கனிவுடன் ஏற்றிடுவாய்