நம் தேவ அன்னை ஜெபமாலையை உயர்வாகக் கருதுகிறார்கள் என்றும், மற்ற எந்த பக்தி முயற்சிகளையும் விட இதை அதிகம் விரும்புகிறார்கள் என்றும் வார்த்தைகளாக கூற என்னால் இயலாது. ஜெபமாலைப் பக்தியைப் பிரசிங்கிப்பவர்களுக்கு தேவ அன்னை எவ்வளவு மேலான வெகுமானம் அருளுகிறார்கள் என்றும் ஜெபமாலைக்கு எதிராக வேலை செய்கிறவர்களை எவ்வளவு உறுதியாக தண்டிக்கிறார்கள் என்றும் என்னால் போதிய அளவு எடுத்துறைக்க முடியாது.
முதலாமவர் புனித சாமிநாதர்...
தன் வாழ்நாள் முழுவதும் அர்ச். சாமி நாதர் வேறு எதையும் விட தேவ தாயை போற்றுவதிலும், அவர்களின் மேன்மையை உரைப்பதிலும், எல்லாரும் ஜெபமாலையால் அவர்களை வாழ்த்தும்படி தூண்டும்படியும் கருத்தாயிருந்தார். இதற்கு ஒரு பரிசாக தேவதாயிடமிருந்து எண்ணற்ற வரங்களைப் பெற்றார். பரலோக அரசி என்ற முறையில் நம் அன்னை, தமக்குள்ள பெரிய வல்லமையால் அவருடைய உழைப்பை பல அற்புதங்களாலும் புதுமைகளாலும் விளங்கச் செய்தார்கள்.
தேவ அன்னையின் வழியாக அவர் இறைவனிடம் கேட்ட வரங்கள் எல்லாவற்றையும் பெற்றுக்கொண்டார். அவர் அடைந்த மகிமையில் சிறந்தது ஆல்பிஜென்ஸ் என்ற பதிதத்தை அன்னையின் உதவியால் முறியடித்ததும், ஒரு பெரிய துறவற சபையை நிறுவி அதன் மூப்பராக இருந்ததுமே…
இரண்டாமவர் முத். ஆலன் ரோச்
ஜெபமாலையின் மீது பக்தியை மீண்டும் புதுப்பித்த முத்.ஆலன் ரோச் தேவ தாயிடமிருந்து அநேக சலுகைகளை பெற்றார். அவர் தம் ஆன்ம இரட்சண்யத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்றும், ஒரு நல்ல குருவாகவும், உத்தம துறவியாகவும் நமதாண்டவரைப் போல் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும், மாதா அநேக காட்சிகள் மூலம் அன்புடன் கற்றுக் கொடுத்தார்கள்.
முத். ஆலன் மிகக் கடுமையாக சோதிக்கப்பட்டார். பசாசால் கொடுமைப் படுத்தப்பட்டார். மிக ஆழமான துயரம் அவரை மூடிக் கொள்ளும். சில சமையம் அவ நம்பிக்கையின் அருகிலும் வந்து விடுவார். ஆனால் எப்போதும் தேவ தாயின் இனிய பிரசன்னதினால் அவர் ஆறுதல் பெற்றார். அவருடைய ஆன்மாவைக் கவ்வியிருந்த இருண்ட மேகங்களை அன்னையின் பிரசன்னம் அகற்றி விடும்.
ஜெபமாலையை எப்படிச் சொல்வது என்பதை மாதா அவருக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அதனால் விளையும் பலனை விளக்கிச் சொன்னார்கள். ஒரு மாபெரும் மகிமையான சலுகையை தேவ அன்னை அவருக்குக் கொடுத்தார்கள். அது என்னவென்றால் தன் புதிய பத்தா என்று அழைக்கப்படும் மகிமை. தான் அவர் மீது கொண்டிருந்த புனிதமான அன்பின் அடையாளமாக அவருடைய விரலில் ஒரு மோதிரத்தையும் அணிவித்தார்கள். தன் தலையின் முடியால் வனைந்த ஒரு கழுத்தனியை அவர் கழுத்தில் பூட்டினார்கள். ஒரு ஜெபமாலையையும் அவருக்குக் கொடுத்தார்கள்.
சங்கைக்குரிய அருட்தந்தை திரிதெம் என்பவரும் மிகவும் கற்றறிந்தவர்களான கார்த்தஜெனா, நாவார் நகர் மார்ட்டின் இன்னும் மற்றவர்களும் முத். ஆலனைப் பற்றி மிக உயர்ந்த புகழ் மொழி கூறியுள்ளார்கள். 1470-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8- நாள் ஃபிளாண்டர்ஸிஸ், சூநோல் என்னுமிடத்தில் மரித்தார். 100,000 பேரை ஜெபமாலைப் பக்தி சபையில் சேர்த்திருந்தார் அவர்.
மூன்றாவது ஜெபமாலை ஜாம்பவான் புனிதர் யார் தெரியுமா...
அவர்தாம் நம் மாதா புனிதர் லூயிஸ் மரிய மோன்போர்ட்... இந்நூலின் ஆசிரியர்..
நன்றி : ஜெபமாலையின் இரகசியம்
“ அலகைத் தலையை உருட்ட நாமே அணியைத் திரட்டுவோம்.. ஜெபமாலை.. மணியை உருட்டி பேயை விரட்டுவோம்… “ ஜெபிப்போம்…ஜெபிப்போம்…ஜெபமாலை…
இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !