♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னில் வந்த நாதனுக்கு என்னைக் காக்கும் தேவனுக்கு
நெஞ்சார என்றும் நன்றி சொல்வேன்
வாழ்வளித்த வள்ளலுக்கு வாழ்வளிக்கும் இயேசுவுக்கு
வானெங்கும் முழங்க நன்றி சொல்வேன்
நன்றி நன்றி என்றும் நன்றி சொல்வேன் -2
1. பாவங்களைப் போக்கினார் நன்றி சொல்வேன்
பயமதையே நீக்கினார் நன்றி சொல்வேன் (2)
பரிவுடனே நோக்கினார் நன்றி சொல்வேன்
பாதைதனைக் காட்டினார் நன்றி சொல்வேன்
உண்மை அன்பு நீதியை உணரச் செய்த இயேசுவை
உளமாரப் பாடியே நன்றி சொல்வேன் (2) - நன்றி ... ...
2. எளியவரை நோக்கினார் நன்றி சொல்வேன்
ஏழைகளை நேசித்தார் நன்றி சொல்வேன் (2)
அடிமைகளின் விலங்கொடித்தார் நன்றி சொல்வேன்
அடியவரின் குரல் கேட்டார் நன்றி சொல்வேன்
உரிமை தரும் வேள்வியை உணரச் செய்த இயேசுவை
ஆடியே பாடியே நன்றி சொல்வேன் (2) - நன்றி ... ...