ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே உம்மை நான் பிரிந்து சென்றாலும் என்னோடு தங்கும் ஆண்டவரே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஒரு கணமும் எனைப் பிரியாமல்

என்னோடு தங்கும் ஆண்டவரே

உம்மை நான் பிரிந்து சென்றாலும்

என்னோடு தங்கும் ஆண்டவரே

என்னோடு தங்கும் -3 ஆண்டவரே (2)


1. நீ இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சி இல்லை

என்னை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் (2)

பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது -2

வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலை புதுப்பித்திட


2. என்னோடு நீ இருந்தால் வலிமை பிறக்கின்றது

உமது அருளால் துன்பங்கள் மறைகின்றன (2)

உன் தெய்வீக ஆறுதலால் என்னைப் பலப்படுத்தும் -2

என்முழு உள்ளத்தினால் உம்மையே தினம் நான் நேசித்திட