♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என் மனம் பாடும் பாடலிது தேவா
என்னுள்ளே தீரா தாகமிது நாதா (2)
நீ தரும் நேசம் நினைவினில் வாழும் -2
நிலையில்லா பனிபோல என் சோகம் மாறும்
1. நினைவெல்லாம் மலராக நீ மலர்ந்தாய்
நிம்மதி நீ கொணர்ந்தாய் (2)
கனவெல்லாம் கானல் நீரோ நான் கண்ணீரில் வாழும் மீனோ
உம் திருவடியில் என் மனம் சரணம்
உளமதிலே நீ உன்னொளித் தரணும்
2. வழிமீது விழி வைத்து ஒளி தேடினேன்
இருளினில் நான் விழுந்தேன் (2)
நான் என்ன வாழும் பூவோ இல்லை உம் பாதம் சூடும் பூவோ
என் மனம் நீ வா நிம்மதியைத் தா
என் முகம் தனிலே புன்னகையைத் தா