நீர் ஒருவர் மட்டும் - இயேசுவே என்னைவிட்டு நீங்காதிருப்பதும் ஏனோ தெய்வீக அன்பால் தானோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீர் ஒருவர் மட்டும் - இயேசுவே

என்னைவிட்டு நீங்காதிருப்பதும் ஏனோ

தெய்வீக அன்பால் தானோ -2 (2)


1. என்னைப் பாடி மகிழ்வித்த புள்ளினங்கள் - தங்கள்

கூடுகள் தேடிப் பறந்த பின்னும் (2) - நான்

வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம் - நான்

தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்


2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல் - சொந்த

தாய் கடலோடு கலந்த பின்னும் (2) - எந்தன்

பாதையில் விளக்காய் பகலவனும் - வந்த

காரிருள் மாயையால் மறைந்த பின்னும்