♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
உலகத்தின் ஒளியே உண்மையின் சுடரே
உமதில்லம் நாடி வந்தோம்
மனிதம் மலர்ந்திட புனிதம் வளர்ந்திட புது உலகம் படைப்போம்(2)
வாருங்கள் இறைமக்களே இறை பலியினில் இணைந்திடுங்கள்(2)
1. வார்த்தை நம்மில் மனுவானார் ஏழை மனிதராய் வந்துதித்தார்(2)
மண்ணையே விண்ணாய் மாற்றிடவே
முடிவில்லா வார்த்தையை நமக்களித்தார்
வார்த்தையே நமது வாழ்வானால்
புதிய மனிதராய் மாறிடுவோம் (2)
2. ஏங்கும் விழிகள் துயர் நீக்க தானே பலியாய் கையளித்தார் -2
உலகம் முடியும் காலம் வரை என்றும் நம்மோடு இருக்கின்றார்
இயேசு பலியினில் மீட்புண்டு இறையருள் பெறவே வழியுண்டு -2