தெய்வம் நமது தாயும் தந்தையாம் வையம் நமது அன்பு இல்லமாம் வாழும் நாமெல்லாம் ஒரே குடும்பமாய்


தெய்வம் நமது தாயும் தந்தையாம்

வையம் நமது அன்பு இல்லமாம்

வாழும் நாமெல்லாம் ஒரே குடும்பமாய் - 2

ஆளுவோம் உலகையே அன்பின் சக்தியால்

தெய்வ அன்பின் சக்தியால்


1. அழகிய உலகினில் அருமையாய் நாமெல்லாம்

வாழும் நாளில் அன்பு வேத கீதம் இசைப்போம்

ஒருவரை ஒருவர் மதித்திங்கு வாழ்ந்து

ஒருமைப்பாடு நெறியில் நின்று பெருமை காணுவோம்

உறவு ஒன்றுதான் உலகை இயக்குமே அந்த

உண்மை உணர்ந்து நாம் உறவில் வளருவோம் - 2


2. மத இன சாதியின் அடிமைகள் நாமில்லை

மாண்பு நிறை நேயத்தாலே மனிதரை உயர்த்துவோம்

நீதியும் நேர்மையும் தூய்மையும் வாய்மையும்

வாழ்வுப் பயண வழித்துணையாய் நாளும் கொள்ளுவோம்

உறவு ஒன்றுதான் உலகை இயக்குமே அந்த

உண்மை உணர்ந்து நாம் உறவில் வளருவோம் - 2