♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதயத்தில் காணிக்கை சேர்த்தோம்
எம்மை உமக்களித்தோம் (2)
ஏற்றுக் கொள்வீர் இறைவா எமைக் காத்தருள்வீர் தலைவா (2)
1. கண்ணீர் விட்டு வளர்த்த செடியில் எண்ணிப் பறித்த பூக்கள்
எண்ணற்ற வேதனையில் எம் மக்களின்
மேல் விழுந்த துன்பங்கள் (2)
பொன்னும் பொருளுமில்லை இருண்ட எம்
வாழ்வே காணிக்கை - ஏற்றுக்கொள்வீர் ... ...
2. பக்திப் பற்றுடன் இணைந்து யாம் உந்தன்
பலிபீடம் சூழ்ந்து வந்தோம்
முக்தி எமக்களிக்கும் உம் அன்புப்
பலியில் கலந்து நின்றோம் (2)
நெத்தி வியர்வைப் பலன் கொடுத்தோம் விடிவைத் தாருமய்யா
ஏற்றுக்கொள்வீர் ...