♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
என்னை வாழ வைக்கும் இயேசு என்னோடு இருக்க
என்ன குறை வரும் எனக்கு (2) இயேசு நாமம் வாழ்கவே - 4
1. எளியவர் எல்லாம் வாருங்கள் என்றே என் இயேசு அழைத்தாரே
ஆறுதல் தேடி அலைந்திட்ட என்னை
கரம் தொட்டு அணைத்தாரே (2)
எல்லையில்லா அன்பு கொண்டார் தொல்லையெல்லாம்
தீர்த்து வைக்க எந்தன் உள்ளம் வந்த தெய்வமே
2. முடவர்கள் எல்லாம் நடந்தனர் எந்தன்
இயேசுவின் வல்லமையால்
மொழிதனை இழந்தோர் விழிதனை அடைந்தார்
கர்த்தரின் கருணையினால் (2)
நம்பி வந்தேன் நல்லவரே நன்மையெல்லாம்
தந்து எம்மை என்றும் காக்க வந்த தெய்வமே