இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இதழால் நன்றி சொன்னால் இறைவனுக்காகிடுமோ

இதயத்தில் நன்றி சொன்னால் இயேசுவுக்காகிடுமோ (2)


1. வாழ்வில் காட்டுதலே வானிறை கேட்கும் நன்றி - 2

மனத் தாழ்ச்சியும் தரித்திரமும் தயவும் காட்டும் நன்றி


2. உலகை உருவாக்கி உண்மை வாழ்வளித்து - 2

தன்னைப் பலியாக்கி தந்திடும் இறைவனுக்கு


3. சிலுவைக் கொடியேற்றி ஜெகத்தை மீட்டுயிர்த்து - 2

சிலுவைப் பலன் யாவும் நமக்கே ஈந்தவர்க்கு