♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
ஆராதனை ஆராதனை எம் பாலனே ஆராதனை
ஆராதனை ஆராதனை எம் மீட்பரே ஆராதனை (2)
1. வானமும் பூமியும் படைத்தவா ஆராதனை
வார்த்தையால் எம்மை நிரப்பவா ஆராதனை (2)
வல்லமை எம்மில் சேர்ப்பவா ஆராதனை
வளமும் நலமும் தருபவா ஆராதனை
2. அமைதியில் என்றும் வாழ்பவா ஆராதனை
அருளை தினமும் பொழிபவா ஆராதனை (2)
ஆற்றலாய் எம்மில் இருப்பவா ஆராதனை
ஆனந்த துதியில் மகிழ்பவா ஆராதனை