என்னுயிரே என்னிறையே இயேசு தெய்வமே என் இதயம் எழுவாயே இனிய நல்விருந்தே

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


என்னுயிரே என்னிறையே இயேசு தெய்வமே

என் இதயம் எழுவாயே இனிய நல்விருந்தே

அன்பே உந்தன் வார்த்தை சொல்ல

பாவம் கொண்ட வாழ்வை வெல்ல

அருளின் மழையை என்னில் பொழிய வா ஆ... ஆ...


1. ஏழை மனிதரிலே ஏங்கிடும் கண்களிலே

மழலை மொழியினிலே இரக்கச் செயல்களிலே

இயேசு உன் முகம் பார்க்க இறை உன் மொழி கேட்க

ஆனந்த மழையே அமுதே என்னில் நீயும் எந்த நாளும்

உறைந்திடவா நிறைந்திடவா வாழ்ந்திட வா மகிழ்ந்திடவா


2. உறவின்றி தவிப்போர்க்கும் உணர்வின்றி வாழ்வோர்க்கும்

உரிமை இழந்தோர்க்கும் சுமைகளால் சோர்ந்தோர்க்கும்

கண்ணின் இமையாகக் காக்கும் சிறகாக

ஆனந்த மழையே ... ...