♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இயேசுவின் திருநாம கீதம் என் நெஞ்சிலே எந்நாளுமே
சங்காக முழங்கிட வேண்டும் (2)
1. நான் பாடும் பாடல் நானிலம் எங்கும் எதிரொலித்திட வேண்டும்-2
உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
உணர்வு பெறவேண்டும் உவகை பெறவேண்டும் - 2
2. பலகோடிப் புதுமைகள் செய்தது இயேசுவின்
இணையில்லா திருநாமம் (2)
வாழவைப்பதும் வாழ்விக்கப் போவதும்
அருள்தரும் ஒரு நாமம் இயேசுவின் திருநாமம் - 2