♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் - 2
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் - 2
1. தந்தையாக தாயுமாக எம்மைத் தாங்கினாய் - நல்ல
தோழனாக சோகம் போக்கும் சொந்தமாகினாய் (2)
உணவுதந்து உறுதிதந்து எமைக் காக்கிறாய் - எங்கள்
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய் (2)
இதயக் கோயில் எழுந்து தங்கும் தெய்வமாகினாய்
நன்றி பாடுவோம் நாங்கள் நன்றி பாடுவோம்
பாலனே உமைப் புகழ்ந்து நன்றி பாடுவோம் - 2
2. பாலையாகக் காய்ந்த வாழ்வைச் சோலையாக்கினாய் - நாளும்
பாதைதந்து பயணம் செய்ய தீபமாகினாய் (2)
வலிமைதந்து வளமை சேர்த்து வாழச் செய்கிறாய் - இங்கு
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்(2)
என்றும் உமது சாட்சியாக எம்மை மாற்றினாய்