♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
காணிக்கைப் பொருட்களை இறைவா எம்
கரங்களில் ஏந்தி உம் பீடம் வந்தோம் (2)
1. எங்களின் இதயத் தோட்டத்திலே
எழில் மலர் காய்கனி நிறைந்ததய்யா (2)
பொங்கிடும் மகிழ்வுடன் பறித்து வந்து -2 உம்
பொன்னொளி பீடத்தில் குவித்து வைத்தோம்
2. கோதுமை மாவுடன் எம் மனதில்
கொண்டுள்ள ஆசையைப் பிசைந்தெடுத்து (2)
வேதனைத் தீயினில் வேக வைத்து -2 நல்
வெண்ணிற அப்பமாய்க் கொண்டு வந்தோம்