♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
இதயங்கள் மலரட்டுமே நம்மில்
இன்னிசை முழங்கட்டுமே (2)
இறையருள் வளரட்டுமே அது இகம் எல்லாம் பரவட்டுமே
1. அண்ணலே இங்கு நமை அழைத்தார் - இம்
மண்ணிலே பொங்கும் வாழ்வளித்தார் (2)
வரையில்லா வரங்களை நமக்களித்தார் - 2 தம்
கரையில்லாக் கருணையால் நமை மீட்டார்
2. அன்பிலே மலர்கின்ற விசுவாசம் - அது
குன்றின்மேல் ஒளிர்கின்ற திருவிளக்காம் (2)
நீதியும் உண்மையும் அதன் சுடராம் - 2 அவை
தீதில்லா வாழ்வுக்குச் சான்றுகளாம்
3. இருளெல்லாம் அழித்திட ஒளி கொணர்ந்தார் - நெஞ்சில்
அருள் வளம் செழித்திட நமையழைத்தார் (2)
திருமகன் அன்பினைச் சுவைத்திடும் நாம் - 2 அதை
தரணியர் மகிழ்ந்திடப் பகிர்ந்திடுவோம்