நீ செய்த நன்மை நினைக்கின்றேன் என் நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


நீ செய்த நன்மை நினைக்கின்றேன் - என்

நெஞ்சுருக நன்றி சொல்கின்றேன் இறைவா - 4 (2)


1. உண்டிட உணவும் உடையுமே கொடுத்து

ஒரு குறையின்றிக் காத்து வந்தாய் (2) - ஓர்

அன்னையைப் போலவே அன்பினைப் பொழிந்து

அல்லல்கள் யாவையும் தீர்த்து வைத்தாய் - 2


2. மலருக்குப் பதிலாய் களையெங்கும் தோன்றி

மனதினை நிரப்புதல் பார்த்திருந்தாய் (2)- உடன்

உலரட்டும் என்றே ஒதுக்கிவிடாமல்

களைகளை அகற்றிக் காத்திருந்தாய் - 2