♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... ⇩♪
செவிசாய்க்கும் இறைவன்
நம் அருகில் இருக்கின்றார் (2)
துயரென்றால் போதுமே அதைத் தகர்த்திட வருவார் - சிறு
துயரென்றால் போதுமே நம்மைத் தாங்கிட வருவார்
செவிசாய்க்கும் இறைவன் இறைவன்
1. கூட்டினில் பதுங்கிடும் நத்தையைப் போல்
துயர் கண்டு அச்சம் தேவையில்லை (2)
அஞ்சாதே -2 எனத் தேற்றும்
ஆண்டவர் துணையை நிதம் நினைத்தால்
நெஞ்சினில் துணிவினை தினம் சுமந்து
எதிர்வரும் சோதனை முறியடிப்போம்
இறைவனின் அருட்கரம் தொடர்கின்ற வேளையில்
நன்மைகள் வாழ்வில் பெருகிடுமே
2. விழிகளில் தேங்கிடும் நீர் கண்டால்
அன்பினால் தாய் அதைத் துடைத்திடுவார் (2)
தான்பெற்ற சேய்வாழ தனைமுழுதும்
ஒளிதரும் மெழுகாய் உருக்கிடுவார்
இலைகள் பலதிசை விரிந்தாலும்
வேர்கள் அதனை மறப்பதில்லை
தாயினும் மேலான இறையன்பு
ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை