குருக்களுக்கான ஜெபம்

ஓ நித்திய குருவாகிய இயேசுவே ! ஒருவரும் தீங்கிழைக்கக் கூடாத இடமாகிய உமது திரு இருதயத்தில் உமது ஊழியர்களாகிய குருக்களை வைத்து ஆதரித்தருளும்.

நாள்தோறும் உமது திருச்சரிரத்தை ஏந்தும் அவர்களுடைய கரங்கள் கறைபடாதபடியும், விலைமதிக்கப்படாத உமது இரத்தத்தை பருகும் அவர்களுடைய உதடுகள் மாசுபடியாதபடியும் காத்தருளும். மேன்மை பொருந்திய உமது குருத்துவத்தின் மகிமை முத்திரையால் உறுதிப்[படுத்தப்பட்டுள்ள அவர்கள் இருதயம் தூய்மையாகவும், மன்னுலக நாட்டமற்றதாகவும் இருக்கச் செய்தருளும்.

உமது தூய அன்பால் அவர்களை நிரப்பி உலக பாசங்களிலிருந்து அவர்களைக் காப்பாற்றும். அவர்களுடைய உழைப்பை ஆசீர்வதித்து, மிகுந்த பலனைத் தந்தருளும். அவர்கள் ஊழியத்தைப்பெறும் சகலரும் இவ்வுலகில் அவர்களுக்கு ஆனந்தமும் ஆறுதலுமாய் இருந்து, பரலோகத்தில் அவர்களுக்கு அழியாத கிரீடமாய் இருப்பார்களாக.

நல்ல இயேசுவே ! சினேக அக்கினி நிறைந்த பரிசுத்த குருக்களை எங்களுக்குத் தந்தருளும்.

ஆமென்