ஆண்டவரே பேசும் அடியவன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


ஆண்டவரே பேசும் அடியவன் நான் கேட்கின்றேன்

உன் அடியவன் கேட்கின்றேன் - 2 பேசும் - 4


1. வாழ்வினில் வரும் துன்பச் சூழ்நிலையில் - உன்

வார்த்தை வழிகாட்ட வேண்டும் (2)

தாழ்வினில் நான் மூழ்கித் தவிக்கின்ற போது என்

நிறைவாழ்வே நீ தேற்ற வேண்டும் - உன்

அருள் ஒன்றே நான் தேட வேண்டும் - அது

என் வாழ்வை வளமாக்க வேண்டும் - பேசும் -4


2. வாழ்ந்திடும் மாந்தர்கள் உறவினிலே உன்

வார்த்தை விளக்காக வேண்டும் (2)

நாளும் நடக்கின்ற செயல்களிலே - உன்

கரம் ஒன்றே நான் காண வேண்டும் - என்

இதயத்தில் நீ பேச வேண்டும் - உன்

இறைவார்த்தை வாழ்வாக்க வேண்டும் - பேசும் - 4