இறைவார்த்தை கேட்டு இதயத்தில் ஏற்று எந்நாளும் வாழ்ந்து என்றும் பறைசாற்று

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


இறைவார்த்தை கேட்டு இதயத்தில் ஏற்று

எந்நாளும் வாழ்ந்து என்றும் பறைசாற்று (2)


1. வாழ்வுதரும் வார்த்தை தானே வழிகாட்டிடும் வல்லமைதானே 2

வேறென்ன வேண்டும் வேதனைகள் போக்க

விரும்பாத மனங்கள் விழிநீரைச் சுமக்கும்

வாழ்வாகும் வார்த்தை அவரே

வழிபாட்டில் வரம் கேட்டு நிற்போம் -2


2. உண்மை சொல்லும் உந்தன் வார்த்தை

உறவைப் பேணும் உணர்ந்தோம் என்றால் (2)

உருவாக்கும் எம்மை உம் சொல்லில் வாழ்ந்தால்

ஊரெங்கும் அமைதி உன்னாலேதானே என் இயேசு தெய்வமே

எனதாக மாறு எல்லாமேயாகு - 2