காணிக்கை தர நான் வருகின்றேன் உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


காணிக்கை தர நான் வருகின்றேன்

உன் கரங்களில் என்னைத் தருகின்றேன்

காணிக்கை தர நான் வருகின்றேன் (2)


1. என்னக் கொடுத்தாலும் பயனில்லை நான்

என்னைக் கொடுக்காமல் பொருள் கொடுத்தால் (2)

என்னையே தான் நீ கேட்கின்றாய் - நான்

என்னையே முழுவதும் தருகின்றேன் (2)


2. சிந்தனை சொல் செயல் திறன் அனைத்தும் - மனம்

உள்ளெழும் ஆசைகள் ஒவ்வொன்றும் (2)

ஒரு துளி நீராய்க் கலக்கின்றேன் - அதை

பயனுள்ள பலியாய் மாற்றிடுவாய் (2)