தேவனின் திருவடி செல்வோம்

♫ பாடலைக் கேட்க / பதிவிறக்கம் செய்ய... 


தேவனின் திருவடி செல்வோம்

தேடியே அவரருள் பெறுவோம் (2)

ஒன்றாக இணைந்து பலியினில் கலந்து - 2

உன்னதர் அவரிலே மகிழ்வோம் - அல்லேலூயா - 8


1. தன்னையே பலியாய் தந்திட்ட தேவன்

தரணியில் நம்மை அழைக்கின்றார் (2)

சமத்துவம் நிலைத்திட மனிதமும் மலர்ந்திட

மன்னவன் பலியினில் இணைந்திடுவோம்

இனி ஒன்றாக உலகம் படைப்போம்

புதியதோர் வாழ்வைப் பெறுவோம் (2)


2. இறைவனின் சொந்தப் பிள்ளைகளாய்

வாழ்ந்திட நம்மை அழைக்கின்றார் (2)

சமத்துவ உலகில் சங்கமமாகிட

மாபரன் பலியினில் இணைந்திடுவோம் - இனி ஒன்றாக...