இப்போது நாம் செய்ய வேண்டிய ஒரே காரியம் அன்று நினிவே நகரத்தில் அரசன் முதல் அனைத்து மக்களும் செய்த ஜெபம்.. தவம்.. பரிகாரம்தான் ஒரே வழி..கடவுளை நம் ஜெப தவ பரித்தியாகங்களால் சாந்தப்படுத்துவோம்..
“ உன் தலை மயிரெல்லம் எண்ணப்பட்டுள்ளது “ என்று சொன்னார் நம் தேவன்.. நம் தலையில் உள்ள ஒரு முடி கூட அவர் அனுமதியில்லாமல் விழாது என்றால்.. ஆண்டவருடைய அனுமதியில்லாமல் இந்த வைரஸ் நம்மைத் தாக்குமா? உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் ஒரு வைரஸால் தாக்கப்படுகிறது.. கொத்து கொத்தாக மக்கள் சாகிறார்கள்.. அந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.. போன வருட டிசம்பர் மாதம் 13- தேதியிலிருந்து இன்று வரை அதற்கு தீர்வு இல்லை.. ஓடி ஒளியுங்கள்.. தனியாக இருங்கள் இதுதான் இன்று வரை சொல்லப்பட்டு வருகிறது.. விடை இல்லை.. அன்று உலகத்தில் நிறைய இடங்களில் மக்கள் அன்று வரை பார்த்திராத சுனாமி வந்தது… இப்போது மக்கள் இதுவரை கேள்விப்படாத வைரஸ் வந்துள்ளது.. ( இரண்டுமே டிசம்பர் மாதம்தான்)
நாம் கொஞ்சம் நம்மை திரும்பிப் பார்ப்போம்… நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்… மேலும் உலகத்தில் மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறது..
முதலில் இந்த நோய் செய்திருக்கும் வேலைகளைப் பார்ப்போம்..
1. ஒவ்வொருவருக்கும் மரண பயத்தை ஏற்படுத்தியுள்ளது..
2. இரவு விடுதிகள் (நைட் கிளப்) மூடப்பட்டுள்ளது..
3. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன…
4. டி.வி. சீரியல்கள் இன்னும் அதே போதனைகளோடு ஒடுகிறாதா? ஓடினாலும் அதை மக்கள் பார்க்கிறார்களா தெறியவில்லை.
5. பாதிக்கப்பட்ட அனைவரையும் தனிமைப் படுத்தப் படுத்துகிறார்கள்..
6. உதவிக்குக் கூட ஆள் இல்லை..
7. சொந்த குடும்பத்தினரே அவர்களை கவனிப்பார்களா தெறியவில்லை..
நாம் என்ன செய்து கொண்டு இருந்தோம்..
1. கடவுளுக்கு நேரம் ஒதுக்கவில்லை..
2. குடும்பமாக கூடி ஜெபிக்கவில்லை.. குடும்ப ஜெபமாலை இல்லை..
3. எந்த நேரமும் டி.வி. சீரியல்..
4. பரிசுத்த ஆவியின் ஆலயமான உடலை தண்ணியை ஊற்றி… புகையை உள்ளே விட்டு… மேலும் தீய எண்ணங்களால் மாசு படுத்துகிறோம்..
5. “உன்னை நேசிப்பது போல பிறரையும் நேசி “ ஆனால் நாம் பிறரை நேசிக்கிறோமா?
6. அடுத்தவன் நல்லா இருப்பது நமக்குப் பிடிக்காது.. எப்போ பார்த்தாலும் புரணி.. புரணி.. புரணிதான்.. ( பிறரை நேசிக்காததால்தான் தனிமைப்படுத்தவது நடக்கிறதோ என்று நினைக்கத்தோன்றுகிறது..)
7. நான் அல்லது என் குடும்பம்தான் நன்றாக இருக்க வேண்டும்..
மேலும் பார்ப்போம் கலாச்சார சீரழிவுகள்..
8. இயற்கைக்கு மாறாக ஆண் ஆணோடும்.. பெண் பெண்ணோடும்.. அதற்கு வக்காலத்து வாங்குவதற்கு பெரிய பதவியில் இருப்பர்களும் சினிமாக்காரர்களும் சப்போர்ட்.
9. கொரோனோவுக்கு முன்னால் வெளி நாடுகளில் நடந்த போரட்டம் என்ன தெறியுமா… கருக்கலைப்புக்கு சுதந்திரம்..
10. ஆண்டவர் படைக்கும் உயிரைக் கொலைசெய்வார்களாம் அதற்கு அனுமதி கொடுக்க வேண்டுமாம்..
11. பணம் இருந்தால் எப்படியும் வாழலாம்.. எப்படியும் கெட்டு சீரழியலாம்.. பார்த்தோல் அல்லவா டி.வியில்.. பேஸ் புக் ஜோடிகள்.. டிக்டாக் ஜோடிகள்..
12. புதுசு புதுசா எதையெல்லாமோ கண்டுபிடித்து மிக மோசமான விபச்சார வாழ்க்கையை.. வெளிப்படையாக அது பாவம்.. கடவுளுக்கு பச்சைத் துரோகம்.. என்ற கூச்ச உணர்வு கூட இல்லாமல் வாழ்வது..
13. நான் எப்படி சந்தோசமாக வாழ்வது.. வாழ்க்கையை எப்படி enjoy பன்னுவது இதுதானே நம் குறிக்கோள்..
14. நம்முடைய கடமையை காற்றில் பறக்கவிட்டுத் திரிவது.. கணவனாக.. மனைவியாக… பிள்ளையாக.. பெற்றோராக.. இன்னும் இருக்கிறது அதை அவரவர்கள் நிரப்பிக்கொள்ள வேண்டும்.. – ஆக, - ஆக, - ஆக.. என்று..
ஆண்டவருடைய சாயலாகவும்.. பாவனையாகவும் படைக்கப்பட்ட நம் ஆன்மாவில் ஆண்டவருடைய சாயல் எங்கே.. ? அவருடைய பாவனை எங்கே..
முதலில் மனம் வருந்துவோம்… நம்முடைய பாவத்திற்காக நம் பரிசுத்த தேவனிடம் மன்னிப்பு கேட்போம்… நல்ல பாவசங்கீர்த்தனம் செய்வோம். நம் சொந்த இச்சைகளுக்காக நாம் செலவழித்த நேரங்களுக்கு பதிலாக ஆண்டவரோடு ஆண்டவருக்காக நேரம் செலவழிப்போம்… நாம் செய்த பாவங்களுக்கு பரிகாரம் செய்வோம்.. நம் உடடை பரிசுத்த ஆவியின் ஆலயமாக்குவோம்… பிசாசையும் அவன் ஆரவாரங்களையும் விட்டு விட்டு நம் ஞானஸ்தானத்தை புதுப்பித்துக்கொள்வோம்..
எந்தவிதமான தீய ஆவிக்கும் இடம் கொடுக்காமல் பரிசுத்த ஆவிக்கு மட்டுமே இடம் கொடுப்போம்… அவரால் நாம் நிரப்பட்டு ஆண்டவர் இயேசு சுவாமியின் வயதை நிறைவு செய்வோம்..அவரைப் பின் செல்வோம்.. அவராக வாழ்வோம்… வாழ்வது நானல்ல என்னில் கிறிஸ்துவே வாழ்கின்றார்..என்று வாழ முடிவு செய்வோம்… எல்லாம் சரியாகிவிடும்..
இப்போது நாம் சிந்திக்காவிட்டால் இனி எப்போதுமே நம்மால் சிந்திக்க முடியாது.. இது
யாரையும் தீர்ப்பிட அல்ல… நம்மை மாற்றிக்கொள்ளவே இந்த பதிவு..
ஆண்டவரே இரக்கமாயிரும்… ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.. இரக்கமாயிரும்..